சேலத்தில் கொரோனா நோயாளிகள் பகுப்பாய்வு மையம்- கலெக்டர் தகவல்

சேலத்தில் கொரோனா நோயாளிகள் பகுப்பாய்வு மையம்- கலெக்டர் தகவல்
X

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில்,  கொரோனா சிகிச்சை வழிகாட்டும் மையத்தில், தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கான க்கு பகுப்பாய்வு மையம் ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும், கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சேலத்தில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காத அளவுக்கு, நிரம்பி வழிகின்றன.
அண்மையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வழிகாட்டும் மையத்தில் நோயாளிகள் தரையில் படுக்க வைத்து, ஆக்சிஜனுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, இந்த புகார் தொடர்பாக மருத்துவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வழிகாட்டு மையத்தின் அருகே, நோயாளிகளின் உடல்நிலை குறித்து பகுப்பாய்வு செய்வதற்கான 30 ஆக்சிஜன் கூடிய படுக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது, ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

சேலத்தில், பகுப்பாய்வு மையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், நோயாளிகளின் உடல்நிலை பரிசோதித்து, உடனுக்குடன் ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை அளிக்கப்படும் என்று சேலம் கலெக்டர் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!