சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் குறைதீர்வு முகாம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் குறைதீர்வு முகாம்
X

பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு குறைதீர்க்கும் முகாம் குறைகேட்பு முகாம் துவங்கியது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்படாமல் புகார் பெட்டி மூலமாக மனுக்கள் பெறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறலாம் என்று கூறியிருந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அலுவலகத்தில் இன்று புகார் மனுக்கள் பெறப்பட்டது.

இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்களை பெறுவதால் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பொதுமக்கள் தங்களது குறைகளை மக்கள் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்