காமெடி நடிகர் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு

காமெடி நடிகர்  வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பு
X

சேலம் வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக காமெடி நடிகர் கிங்காங் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெங்கடாசலம் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்குவதை ஒட்டி தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று பொன்னம்மாபேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வெங்கடாசலத்திற்கு ஆதரவாக பிரபல காமெடி நடிகர் கிங்காங் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

வேட்பாளருடன் வீடு வீடாக சென்ற கிங்காங் அதிமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தான் வெற்றி பெற்றால் செம்மணை மேடு பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி ஏற்படுத்தி தருவேன் என வெங்கடாசலம் உறுதி அளித்து வாக்குகளை சேகரித்தார். உடன் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!