ரேஷன் கடை பணியாளர்கள் பொது மக்களிடம் நற்பெயர் எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

ரேஷன் கடை பணியாளர்கள் பொது மக்களிடம் நற்பெயர் எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த நியாய விலைக்கடை பணியாளர்களுக்கான பயிற்சி.

பொது மக்களிடம் நற்பெயர் எடுக்கும் வகையில் நியாய விலை கடை பணியாளர்கள் செயல்பட வேண்டும் என சேலம் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் பொது விநியோக திட்ட பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்திடும் வகையில் நியாய விலை கடை பணியாளர்களுக்கான பயிற்சி இன்று துவங்கியது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதல்கட்டமாக 200 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கான பயிற்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் துறை கூட்டுறவு துறை நியாய விலை கடை என்ற பெயரிலேயே நியாயம் உள்ளதால் இதில் பணியாளர்கள் நியாயமாக செயல்பட வேண்டும். நியாய விலைக் கடையின் நடவடிக்கை முழுவதும் மின் மையமாக்கபட்டு உள்ளதால் அதனை கையாளும் திறமையை பணியாளர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

நியாய விலைக் கடைக்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சூழலில் வரும்போது அவர்களிடம் கனிவாக பேசி கையாளும் திறனை மேம்படுத்தும் வகையில் மன தத்துவ பயிற்சி அளிக்கப்படும். எடை அளவு குறையாதபடி செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர், இது போன்ற பயிற்சிகளை பயன்படுத்தி பொது மக்களிடம் நற் பெயர் எடுக்கும் வகையிலும், அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

நிகழ்ச்சியில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!