பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி
X
கஜினி திரைப்பட தயாரிப்பாளர் சந்திரசேகரன், கொரோனா பாதிப்பால் சேலத்தில் காலமானார்.

சேலம் அழகாபுரம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் (59), கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல், சீலநாயக்கன்பட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சேலம் சந்திரசேகர், தனுஷ் நடித்த சுள்ளான், பிப்ரவரி 14, கஜினி, சபரி, கில்லாடி உள்ளிட்ட படங்களை, சரவணா கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரனின் மறைவு, திரைப்பட துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!