முதல்வர் பழனிச்சாமி இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

முதல்வர் பழனிச்சாமி இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
X
சேலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் பத்தாம் தேதி முதல் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசியினை செலுத்தும் பணி துவங்கிய நிலையில், தற்போதும் ஐந்தாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் கடந்த மார்ச்11 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில், 29 நாட்களான பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவமனை முதல்வர் அறையில் செலுத்திக் கொண்டார். இவருடன் பாதுகாப்பு காவலர்கள், கார் ஓட்டுனர், உள்ளிட்டோரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். கொரோனா பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது கட்டமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!