பேருந்து ஓட்டுனரை தாக்கும் ஆட்டோ ஓட்டுனர்

பேருந்து ஓட்டுனரை தாக்கும் ஆட்டோ ஓட்டுனர்
X

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தனியார் பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதி எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் தனியார் நகர பேருந்து ஒன்று, சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவதாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தனியார் பேருந்து பால் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்புறம் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை முந்துவதற்காக, தனியார் பேருந்து ஓட்டுநர் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தார். இதனால் வெறுப்படைந்த ஆட்டோ ஓட்டுநர் திடீரென ஆட்டோவை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு இறங்கி வந்து தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத பேருந்து நடத்துனர் அவர்கள் இருவரையும் விலக்கி விட்டார். இதனையடுத்து சக ஆட்டோ ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனரை இழுத்துச் சென்றனர்.

இதனால் சுமார் 1 மணிநேரம் ,அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் , தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கும் காட்சிகள் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!