மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு டூவீலர் பரிசு: மாநகராட்சி மனமிறங்குமா

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு டூவீலர் பரிசு: மாநகராட்சி மனமிறங்குமா
X

சேலம் 4 ரோடு பகுதியில் மயானத்தில் 20 வருடங்களாக பணியாற்றும் சீதாவுக்கு, ஸ்கூட்டர் வழங்கிய  தன்னார்வலர்கள்.

சேலத்தில், மயானத்தில் 20 வருடமாக பணியாற்றும் பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தை தன்னார்வலர்கள் வழங்கினர்.

சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள டிவிஎஸ் சுடுகாட்டில் 20 வருடங்களுக்கு மேலாக சீதா என்ற பெண் தனி ஒருவராக சடலங்களை அடக்கம் செய்தும், எரியூட்டும் பணிகளையும் செய்து வருகிறார்.

தினம்தோறும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து வீட்டிற்கு சென்று, மீண்டும் அங்கிருந்து இடுகாட்டிற்கு நடந்தே வருகிறார். இதனை அறிந்த 'அன்பை பகிர்வோம்' என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள், சீதாவிற்கு உதவிடும் நோக்கில் இன்று ரூ. 90,000 மதிப்பில் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி அவருக்கு பரிசாக வழங்கினர்.

மாநகராட்சி மனமிறங்குமா?

புதிய இரு சக்கர வாகனத்தை பெற்ற சீதா மகிழ்ச்சியுடன் அதில் உலா வந்தார். சடலங்களை அடக்கம் செய்தால், அவர்கள் வழங்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறோம். இது அன்றாட உணவிற்கு கூட போதவில்லை. எனவே, அரசு, எங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி செய்து மாத வருமானம் வரும் வகையில், இந்த மயானத்தில் மாநகராட்சி பணியாளராக என்னை நியமனம் செய்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என சீதா கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!