அடிப்படை வசதி வேண்டி தேர்தல் புறக்கணிப்பு: பேனரால் சர்ச்சை

அடிப்படை வசதி வேண்டி தேர்தல் புறக்கணிப்பு: பேனரால் சர்ச்சை
X
அடிப்படை வசதியில்லாததால் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக, சேலத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சேலம் முகமதுபுரா கரீமியா வக்பு நிலத்தில், குடியிருக்கும் வாடகைதாரர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூறியிருப்பதாவது: சேலம் முகமதுபுரா மதராஸாயே கரீமியா வக்பு நிலத்தில், குடியிருக்கும் வாடகைதாரர்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, பொது கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும், முகமதுபுரா மதராஸாயே நிர்வாகம் செய்து தருவதில்லை. மாநகராட்சி செய்ய முன்வந்தால், செய்யவிடாமல் வாடகைதாரர்களை அடிமைகளாய், தீண்டத்தகாதவர்களாக நடத்தும் நிர்வாகத்தை கலைத்து, வக்பு வாரியமே நடத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story