சேலம் நல வாரிய அலுவலகத்தில் வெயிலில் தொழிலாளர்கள் அவதி

சேலம் நல வாரிய அலுவலகத்தில்  வெயிலில் தொழிலாளர்கள் அவதி
X
சேலம் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர்களை நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் அவல நிலையுள்ளது. அலுவலகத்திற்கு வரும் தொழிலாளர்களை நிழலில் அமர வைக்க வழிவகைச் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன் அடிப்படையில் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தல் புதுப்பித்தல் மற்றும் நல உதவி பெறுதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பம் செய்ய தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கட்டுமான வாரிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரையும் அலுவலக கேட்டிற்க்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அனைவரும் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் ஊழியர்கள் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் கேட்டுக்கு வெளியில் இருக்கும் பொதுமக்களிடம் மனுக்களை பெற தொடங்கினர்.

வெயிலின் கொடுமை ஒரு பக்கம் கூட்டநெரிசல் கொரானா பரவல் மறுபுறம் என தற்போதைய சூழலில் ஊழியர்களின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.

பொதுமக்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் கேட்டிக்கு வெளியே நிற்க வைத்து அவர்கள் விண்ணப்பத்தை பெறுவதில் நோக்கமாக இருந்தார்களே தவிர அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்து விண்ணப்பங்களை பெற யாரும் அக்கறை காட்டவில்லை.

இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அரசு அலுவலகத்தில் பொது மக்களுக்கு உரிய மரியாதை தரப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்தனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
future of ai in retail