அறிஞர் அண்ணா பிறந்த நாள்: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

அறிஞர் அண்ணா பிறந்த நாள்: திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சரும், பேரறிஞருமான அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!