ஆ.ராசா உருவ பொம்மையை எரித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆ.ராசா உருவ பொம்மையை எரித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் தமிழக முதல்வரின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய திமுக ஆ. ராசாவை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது தமிழக முதல்வரின் தாஆ.யார் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய ஆ ராசாவை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக ஆ.ராசாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி