அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் துவக்கம்

அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் துவக்கம்
X

சேலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரம் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் துவங்கப்பட்டது.    

சேலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது போதுமான அளவு தடுப்பூசி இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தினந்தோறும் தடுப்பூசி போடும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையம் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு தடுப்பூசி மையத்தை துவக்கி வைத்தார். இந்த மையத்தின் மூலம் 24 மணி நேரமும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்காக மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் முறையாக பதிவு செய்யப்பட்டு அனைவருக்கும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!