குற்றங்களை தடுக்க 1லட்சம் சிசிடிவி கேமரா: சேலம் காவல்துறை அதிரடி முயற்சி

குற்றங்களை தடுக்க 1லட்சம் சிசிடிவி கேமரா: சேலம் காவல்துறை அதிரடி முயற்சி
X

30 சிசிடி கேமராக்களின் இயக்கத்தினை இன்று மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

சேலம் மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க 1லட்சம் சிசிடிவி கேமராவை அமைக்க காவல்துறை நடவடிக்கை

சேலம் மாநகர் முழுவதும் குற்றச் சம்பவம் தடுக்க ஒரு லட்சம் சிசிடிவி கேமராவை அமைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர் முழுவதும் பல்வேறு குற்றங்களை தடுப்பதற்கு காவல் துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் தடுக்கும் விதமாக மூன்றாவது கண் என சொல்லக்கூடிய சிசிடிவி கேமராவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் சேலம் வடக்கு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 2,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. தற்போது சேலம் மாநகர் முழுவதும் இதுவரை 17,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.ஆர். சி கன்ஸ்ட்ரக்ஷன், ANS ஜுவல்லரி, AVR ஜுவல்லரி உள்ளிட்ட 8 தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அஸ்தம்பட்டி அம்மா உணவகம், ராமகிருஷ்ணா சாலை, காந்திரோடு, வின்சென்ட், குளூனி பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 30 சிசிடி கேமராக்களின் இயக்கத்தினை இன்று மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் கூறும்போது தமிழகத்தில் சேலம் முன்னோடி மாநகரமாக விளங்க வேண்டுமென்றும் குற்றச்சம்பவங்கள் இல்லாத நகரமாக உருவாக்க வேண்டும் என்பது நோக்கம். அவ்வாறு காவல் துறையினருக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் அதனை கண்காணிக்க பெரிய உதவியாக சிசிடிவி கேமராக்கள் செயல்படுகின்றன. எனவே காவல்துறையின் மூன்றாவது கண்ணாக இருக்கக்கூடிய சிசிடி கேமராவை சேலம் மாநகர் முழுவதும் ஒரு லட்சம் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது சேலம் மாநகரின் ஒவ்வொரு 30 மீட்டர் இடைவெளியிலும் கேமராக்கள் இருக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு தெருக்களிலும் கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றங்களை கண்டுபிடிக்க மிகப்பெரிய உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil