சேலத்தில் ஸ்டாலின் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பு

சேலத்தில் ஸ்டாலின் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பு
X
சேலத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு. செவ்வாய்பேட்டையில் மக்களுடன் மக்களாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 இடங்களில் திமுக நேரடியாக களம் காண்கிறது. இதில் வீரபாண்டி வேட்பாளர் தருண் மற்றும் ஏற்காடு வேட்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு ஸ்டாலின் வருகை தந்தார் .

பின்னர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களுடன் மக்களாக நடந்தே சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது இளைஞர்கள் பெண்கள் என பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து இன்று மாலை சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை செய்கிறார்.

Tags

Next Story
ai and future cities