மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சேலம் கலெக்டர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இணைப்பு சக்கரங்கள் பொருத்திய வாகனத்தில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, சேலம் மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி மாநகரின் பிரதான சாலைகள் வழியே சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu