இன்ஜினியர் வீட்டில் கம்ப்யூட்டர்கள் திருட்டு- சிறுவன் கைது

இன்ஜினியர் வீட்டில் கம்ப்யூட்டர்கள் திருட்டு- சிறுவன் கைது
X

சேலத்தில் இன்ஜினியர் வீட்டில் கம்ப்யூட்டர்கள் திருடியதாக சிறுவன் கைது செய்யப்பட்டார்.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். இன்ஜினியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 கம்ப்யூட்டர்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி