மகளிர் தினத்தில் தேர்தல் விழிப்புணர்வில் பெண்கள்
சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டு வருகிறது.
மகளிர் தினமான இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் பெண்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராமன் பாராட்டுகளையும் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.
மாற்று திறனாளிகள் அனைவரும் தபால் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தும் விதமாக வண்ணக்கோலம் வரையப்பட்டிருந்தது. மேலும் சமூகத்தில் வாக்களிக்கும் உரிமை கொண்ட அனைவரும் தவறாமல் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அணுக வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அட்டைகளை ஏந்தி பெண்கள் அணிவகுத்து நின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu