/* */

தேர்தலை முன்னிட்டு சேலத்தில் மீடியா கண்காணிப்பு மையம்

தேர்தலை முன்னிட்டு சேலத்தில் மீடியா கண்காணிப்பு மையம்
X

தேர்தலை முன்னிட்டு விதிமுறை மீறல் நடைபெறுவதை தடுக்கும் விதமாக மீடியாக்களில் விளம்பரங்களை கண்காணிக்கும் வகையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மீடியா கண்காணிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 6 ம் தேதி நடக்க உள்ளது.. அதனையொட்டி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்காக உள்ளூர் மற்றும் பொது டிவி சேனல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது கட்சியினர் விளம்பரங்கள் செய்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரேனும் முன் அனுமதியின்றி தேர்தல் செலவை மறைக்கும் நோக்கில் விளம்பரம் செய்கின்றனரா என்பதையும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான நிகழ்வுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை கண்காணிக்கவும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய டிவி சேனல்கள் மற்றும் உள்ளூர் டிவிக்கள் போன்றவைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மைய அறை ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அறையை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டார்.


Updated On: 5 March 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு