நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு

நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு
X

சேலத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ராமன் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவுக்கு 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடையே வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் திரையுலக நட்சத்திரங்கள் வாக்களிப்பதன் கட்டாயம் குறித்து எடுத்துரைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!