போலீஸ் பாதுகாப்புடன் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

போலீஸ் பாதுகாப்புடன் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
X

சேலம் மாவட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் 100 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிவுற்று தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு 100 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாக்குபதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களை பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு,சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இதன்படி 7460 வாக்குப்பதிவு இயந்திரங்கள்,5579 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 5970 வாக்கினை சரி பார்க்கும் கருவி ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!