ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
சேலம் தமிழ்நாடு கிராம வங்கி அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்; காப்பீட்டிற்கான தவணைப்பங்கு தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஏற்காடு பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அளவில் 24 குடும்பங்களுக்கு திடீரென கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு ஊதியம் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டிய இவர்கள் நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு தவணையில் 25 சதவிகிதத்தை வங்கி நிர்வாகம் செலுத்தி வந்த நிலையில் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பல்லவன் கிராம வங்கியினை பாண்டியன் கிராம வங்கியில் இணைத்த பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி ஏதுமில்லை என்று குற்றம் சாட்டிய ஓய்வூதியர்கள் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் விரோத போக்கை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ai and business intelligence