வெண்கல அம்மன் சிலை திருட்டு-பக்தர்கள் அதிர்ச்சி

வெண்கல அம்மன் சிலை திருட்டு-பக்தர்கள் அதிர்ச்சி
X

பிரசித்தி பெற்ற சேலம் பூட்டு முனியப்பன் கோவிலில் இருந்த வெண்கல அம்மன் சிலை திருடி செல்லப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஏற்காடு சாலையில் அமைந்துள்ளது பூட்டு முனியப்பன் கோவில். இந்த கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் வைத்து வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பூட்டை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். சமீப காலமாக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் இருந்த வெண்கலத்தினாலான காளியம்மன் சிலை நேற்று இரவு திருடி செல்லப்பட்டுள்ளது.

இன்று காலை கோவிலுக்கு வந்த பார்த்த போது அம்மன் சிலை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி மற்றும் பக்தர்கள் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!