விடுதியை திறக்க மாணவிகள் கோரிக்கை
சேலம் மாவட்டம் கருமந்துறை மலை கிராமத்தை சேர்ந்த, பதினோராம் வகுப்பு பள்ளி மாணவிகள் 20 க்கும் மேற்பட்டோர் பள்ளி சென்று வர உரிய பேருந்து வசதி இல்லாததால், வாழப்பாடி ஆதிதிராவிட நல விடுதியில் தங்கிப் படிப்பதற்கு இடம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து மலைகிராம பழங்குடியின பள்ளி மாணவிகள் கூறும்பொழுது நொய்ய மலை, பகடு பட்டு, மேல்வளவு, கீழ்வளவு, வாரம் உள்ளிட்ட மலை கிராமப் பகுதியில் உள்ள பழங்குடியின பள்ளி மாணவிகள் வாழப்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்டோர் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறோம். நாங்கள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு அதே பள்ளியில் பயின்றோம். அப்போது ஆதிதிராவிட நல விடுதியில் தங்கி படித்து வந்தோம். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நாங்கள் கருமந்துரை மலை கிராமத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பதினோராம் வகுப்பு பள்ளி மாணவிகள் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்து மூலம் வந்து செல்கிறோம். எங்களால் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாழப்பாடியில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படிக்க விடுதி காப்பாளர் இடம் அனுமதி கேட்டதற்கு, கொரோனா விதிமுறையை காரணம் காட்டி 20 மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறுகிறார். இதனால் மீதமுள்ள 20 மாணவிகள் பள்ளி படிப்பு பாதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படிக்க அனுமதி அளிக்க வேண்டுமென கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu