வருவாய் அலுவலர்கள் போராட்டம்- பணிகள் பாதிப்பு

வருவாய் அலுவலர்கள் போராட்டம்- பணிகள் பாதிப்பு
X

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

வருவாய் துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஏற்கனவே 2 கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று முதல் 3 ஆவது கட்டமாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் முன்பு 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் வருவாய் துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்படுவதோடு தேர்தல் பணிகளும் முடங்கும் என்பதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!