கண்களை கட்டிக்கொண்டு மாணவிகள் விழிப்புணர்வு

கண்களை கட்டிக்கொண்டு மாணவிகள் விழிப்புணர்வு
X

சேலத்தில் பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

பார்வை குறைபாடு விழிப்புணர்வு மாதம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது குறித்த சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சேலம் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பார்வை குறைபாட்டினை வலியுறுத்தி தங்களின் கண்களை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் மேம்பாலம் வழியாக காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவுற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!