துணை வாக்குச்சாவடிகள் குறித்து ஆட்சியர் விளக்கம்

துணை வாக்குச்சாவடிகள் குறித்து ஆட்சியர் விளக்கம்
X

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது துணை வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் 1050 க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் துணை வாக்குச்சாவடிகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி தேர்வு செய்யப்பட்ட துணை வாக்குச்சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் சேலத்தில் மாவட்ட ஆட்சியர் இராமன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் துணை வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட ஆட்சியர் அரசியல் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் எடுத்துரைத்தார். இதன்படி சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை 3277 ஆக இருந்தது தற்போது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி 1050 க்கு மேலுள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு 1003 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்றின் காரணமாக இது போன்ற துணை வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் இது குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் எழுத்துப்பூர்வமாக நேரடியாக தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!