பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஒரு லிட்டர் நூறு ரூபாயை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில் இது குறித்த அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நெற்றியில் நாமம் இட்டு, கையில் திருவோடு ஏந்தி, ஆட்டோவில் கயிறு கட்டி இழுப்பது போன்று நூதன முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு தங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள் கூறினர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்