மகளிர் குழுக்களிடம் நூதன பண மோசடி-ஆட்சியரிடம் புகார்

மகளிர் குழுக்களிடம் நூதன பண மோசடி-ஆட்சியரிடம் புகார்
X

சேலத்தில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மகளிர் சுய உதவி குழுக்களை குறி வைத்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மகளிர் குழுவினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சேலத்தில், திருநெல்வேலியை சேர்ந்த வாசு என்பவர் அவரது கூட்டாளி டில்லி என்பவருடன் இணைந்து கிராமப்புற பகுதிகளில் பிரபல நிதி நிறுவனத்தின் பெயரை கூறி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் அதிக கடன் தொகை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பதிவுக் கட்டணமாக ரூ.2500 கட்டினால் மூன்றே மணி நேரத்தில் 1 லட்சம் கிடைக்கும் என அவர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் மட்டும் 25 நபர்கள் தலா ரூ. 2500 வீதம் 60 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் கட்டியுள்ளனர்.

ஆனால் வாசு கூறியபடி பணம் ஏதும் கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் பண மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வதோடு, தாங்கள் செலுத்திய முன்பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!