கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சேலம் ஆட்சியர்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சேலம் ஆட்சியர்
X

சேலம் மாவட்டத்தில், மாவட்டஆட்சியர் ராமன் காெரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு காெரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருடன் துணை ஆட்சியர் கீதாபிரியா, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, கோட்டாட்சியர் மாறன், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வக்குமார் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 10,747 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் முன்கள பணியாளர்கள் மொத்தம் 26,315 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இன்று வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திகொள்வதால் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவார்கள் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil