/* */

ஸ்டாலின் தான் வராரு, விடியலைத் தரப்போறாரு கூட்டம் நடத்திய திமுக

ஸ்டாலின் தான் வராரு, விடியலைத் தரப்போறாரு கூட்டம் நடத்திய திமுக
X

ஸ்டாலின் தான் வராரு, விடியலைத் தரப்போறாரு என்ற தலைப்பில் சேலத்தில் கிராம சபை கூட்டத்தை திமுகவினர் நடத்தினர்.

ஸ்டாலின் தான் வராரு ,விடியலை தர போறாரு. என்ற தலைப்பில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ.,வுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் உள்ள மக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு குறைகளை கூறினர். குறிப்பாக கழிவு நீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் வசதி முறையாக இல்லை என்றும் ரேஷன்கடை அமைத்து தர வேண்டும் என்றும் முதியோர் உதவி தொகை மற்றும் விதவை உதவி தொகை கிடைக்க வில்லை என்று குறைகளை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்த பேசிய எம்எல்ஏ.,ராஜேந்திரன், திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆட்சி மக்கள் பிரச்சனை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றும் மாறாக அனைத்து துறைகளிலும் முதல்வர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உள்ளதாகவும் ஒரு லட்சம் கோடி வரை கொள்ளை அடித்து வைத்து உள்ளதாகவும், குற்றசாட்டி, மக்களை கண்டு கொள்ளாமல் உள்ள அதிமுகவை நிராகரிக்க வேண்டும், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Updated On: 24 Dec 2020 11:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்