ஓட்டல் செயல்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்: அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை

ஓட்டல்கள் செயல்படும் நேரத்தை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என, சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளா்கள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஓட்டல்கள் செயல்படும் நேரத்தை அதிகரித்து உத்தரவிட வேண்டும் என, சேலம் மாவட்ட ஓட்டல்கள் உரிமையாளா்கள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அச்சங்கத்தின் தலைவா் எம்.எஸ்.சண்முகம், செயலாளா் பி.எல்.பழனிசாமி, பொருளாளா் ஜெயபால் ஆகியோா் கூறியிருப்பதாவது:

ஓட்டல்கள் நடத்த அனுமதி வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2020 மாா்ச் மாதத்தில் இருந்து கொரோனா கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில், ஓட்டல்கள் சுமாா் 30 சதவீத அளவுக்கு திறக்கப்படவில்லை. ஓட்டல் நடத்த வாங்கிய கடன், வாடகைச் செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளோம்.
எனவே காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் ஓட்டல்களை நடத்திட அனுமதி தர வேண்டும். அதே வேளையில் நேரத்தை அதிகப்படுத்தினால், ஓட்டலில் வேலை பாா்க்கும் பணியாளா்களுக்கு ஊதியம் கொடுக்க உதவியாக இருக்கும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு 50 சதவீத பொதுமக்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai and future of education