சேலம் மாவட்டத்தை மிரட்டும் கொரோனா: பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது

சேலம் மாவட்டத்தை மிரட்டும் கொரோனா: பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்தது
X
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 37 ஆயிரத்தை தாண்டியது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 383 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை அதிகரித்து, 401 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 204 பேர், ஓமலூரில் 28 பேர், ஆத்தூரில் 22 பேர், காடையாம்பட்டியில் 18 பேர், சேலம் ஒன்றியத்தில் 17 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 14 பேர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளியில் தலா 10 பேர், தாரமங்கலத்தில் 9 பேர், மேச்சேரி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், எடப்பாடியில் 7 பேர், சங்ககிரியில் 6 பேர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், மேட்டூரில் 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், கொளத்தூரில் 2 பேர், கொங்கணாபுரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 72 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும், சேலத்தை சேர்ந்த 54 வயதுடைய ஆண் மற்றும் 78 வயதுடைய முதியவர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலனின்றி அவர்கள், பரிதாபமாக இறந்தனர்.

ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து விட்டதால், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 2,276 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 55 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!