சேலத்தில் தீவிரமடையும் கொரோனா பரவல்: பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது

சேலத்தில் தீவிரமடையும் கொரோனா பரவல்: பாதிப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது
X
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது; கொரோனோவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 275 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மேலும் அதிகரித்து 359 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 167 பேர், ஓமலூரில் 36 பேர், ஆத்தூரில் 24 பேர், எடப்பாடியில் 16 பேர், சேலம் ஒன்றியம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், நங்கவள்ளியில் 11 பேர், காடையாம்பட்டி, தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 7 பேர், மகுடஞ்சாவடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மேச்சேரியில் 5 பேர், மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், பனமரத்துப்பட்டியில் 3 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஏற்காட்டில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 2 பேர், கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 164 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1,744 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயதுடைய முதியவரும் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags

Next Story
ai in future agriculture