சேலத்தில் இன்று ஒரே நாளில் 1457 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சேலத்தில் இன்று ஒரே நாளில் 1457 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

பயனாளிக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் ஒரு நாள் பாதிப்பு 1457 பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1738 ஆக உள்ளது. மேலும் 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,06,867 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,616ஆக உயர்வு.

மாவட்டத்தில் 7011 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 1087 பேர் பாதிப்பு. தொடர்ந்து ஆயிரத்தை கடந்து கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

Tags

Next Story
ai marketing future