சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆணையர் தகவல்!

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆணையர் தகவல்!
X

சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 50 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் இன்று மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 48 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை காமிநாயக்கன்பட்டி, பிள்ளையார் கோவில் தெரு, ராமலிங்கம் நகர், சாமிநாதபுரம் மெயின் ரோடு, இ.பி. காலனி, ஜாலி காடு, பச்ச உடையார் காடு, செரி ரோடு, வள்ளுவர் காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை பள்ளி தெரு, தர்ம நகர், மெய்யன் தெரு, கபிலர் தெரு, மடக்காரன் தெரு, காலிங்க தெரு, ராம் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும்,நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை கல்யாணசுந்தரம் காலனி, அரியாகவுண்டம்பட்டி, வசந்தம் நகர், தெய்வ நாயகம் தெரு, சொர்ணபுரி, கே.எ.எஸ். நகர், கோவிந்த கவுண்டர் தோட்டம், சின்ன சாமி தெரு, வாசகசாலை, நாராயணநகர் ஹசிங்போர்டு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என நாளை 50 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் என்றும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!