சேலத்தில் 411 பேருக்கு கொரோனோ- ஒருவர் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.
சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிக்கையின்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 411 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும், 234 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் சுகாதார மாவட்டத்தை சேர்ந்த 109 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த 52 பேர், நகராட்சியை சேர்ந்த 14 பேர், வெளி மாவட்டத்தில் இருந்து வந்த 2 பேர், என மொத்தம் 411 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சேலத்தைச் சேர்ந்த 56 வயது ஆண், தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu