மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்க வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்க  வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

காவல் நிலையங்களில் குவிந்து வரும் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் தொடரும் ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ரெஜிஸ்குமார் தலைமையில் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai in future agriculture