உலகப் புலம் பெயர்ந்தோர் தினம்: சேலத்தில் விழிப்புணர்வு பேரணி

உலகப் புலம் பெயர்ந்தோர் தினம்: சேலத்தில் விழிப்புணர்வு பேரணி
X

உலகம் புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

உலகம் புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி சேலத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் தொழிலாளருக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகம் புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி சேலத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளருக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சேலம் வாழ் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ' கரித்தாஸ் இந்தியா' அமைப்பு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் உலகப் புலம்பெயர்ந்தோர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் சேலம் அழகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்பான ' கரித்தாஸ் இந்தியா' சார்பில் சேலத்தில் உள்ள 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை கட்டி எழுப்புதல் ' நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சேலத்தில் வாழும் வடமாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் , சேலம் மாவட்டத் தொழிலாளர் நலத்துறையின் துணை ஆணையர் மஞ்சள் நாதன், சமூக நலத்துறை துணை ஆணையாளர் சங்கீதா, சேலம் சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் அருட்தந்தை ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.

தொடர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அசாம் , மேகாலயா, பீகார் , ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு புலம்பெயர்ந்து தொழிலாளர்களாக வாழ்ந்து வரும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!