சேலத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

சேலத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்
X

சேலம் மாநகராட்சி 10 ஆவது கோட்டத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள்

சேலம் மாநகராட்சி 10 ஆவது கோட்டத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக,அதிமுக பெண் வேட்பாளர்கள் இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆவது கோட்டத்தில் பாண்டியன் தெரு, புத்து மாரியம்மன் கோவில் தெரு, அண்ணாநகர், தாண்டவன் நகர், சக்தி நகர், செங்கல் அணை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 9,649 வாக்காளர்களை கொண்டது.

இந்த நிலையில் 10 ஆவது கோட்டத்தில் போட்டியிடும் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவரும் ஆர்.சாந்தி என்ற ஒரே பேர் கொண்டவர்களாக உள்ளனர். ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெயர் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்கு சின்னமே முக்கியம் என வேட்பாளர்கள் தெரிவித்தனர் .

Tags

Next Story
ai in future agriculture