சேலத்தை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றுவோம்: அமைச்சர் கே.என் நேரு

சேலத்தை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றுவோம்: அமைச்சர் கே.என் நேரு
X

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 5 ரோடு சந்திப்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம்.

சேலத்தை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றுவோம் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 5 ரோடு சந்திப்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சேலம் மாநகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமைச்சர் கே.என் நேரு அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து வாக்குகளை சேகரிக்குமாறு வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர் மக்களின் அனைத்து கோரிக்களுக்கும் அரசு உரிய நிதியை ஒதுக்கி நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்றார்.

மேலும் சுயேட்சையாக போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேட்புமனுக்களை வாபஸ் பெறவேண்டும். அனைவரும் அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றார்.

உள்ளாட்சி தேர்தலில் பணத்தால் மட்டுமே அ.தி.மு.க வெற்றிபெற முடியாது; அ.தி.மு.க.வினர் எவ்வளவுதான் பணத்தை கொடுத்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்ற கே.என். நேரு, தேர்தலில் அதிமுக எந்த முறையை கையாண்டாலும் திமுக அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. சேலத்தை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story