/* */

சசிகலாவை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன்

சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சசிகலாவை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன்
X

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொன்னையன்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் மூத்த உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன், சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது; ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும், அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார்.

மேலும் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின் படி நடைபெறும்; இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர். அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவு என்றும், அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது என்றார். சாலையில் செல்லும் பலர் அதிமுக கொடியை பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் பயன்படுத்துகிறார் என சாடினார்.

Updated On: 2 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்