சேலம் மாநகராட்சியில் கூடுதலாக 2 வார்டுகள் ஒதுக்கக்கோரி விசிக.,வினர் சாலை மறியல்

சேலம் மாநகராட்சியில் கூடுதலாக 2 வார்டுகள் ஒதுக்கக்கோரி விசிக.,வினர் சாலை மறியல்
X

சேலம் மாநகராட்சியில் கூடுதலாக 2 வார்டுகள் ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சேலம் மாநகராட்சியில் கூடுதலாக 2 வார்டுகள் ஒதுக்கக்கோரி விசிக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 22 மற்றும் 44 ஆவது வார்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் கூடுதலாக இரண்டு வார்டுகள் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்மாபேட்டை மண்டல அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள 34 மற்றும் 40 ஆகிய வார்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி தர கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல்நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வார்டு ஒதுக்கீடுக்காக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!