வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு: சீமான்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தால் கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு: சீமான்
X

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்.

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பின், வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து அறிவிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தமிழக பெருவிழா நடைபெற்றது. முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழர்கள் நாங்கள் தமிழ்நாடு நாளாக தொடர்ச்சியாக நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு சேலத்தில் கொண்டாடுகிறோம்.1967ல் தமிழ்நாடு மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள் நவம்பர் 1, தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்ட நாள் ஜூலை 18 ஆகும்.ஆனால் தமிழக அரசு ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவித்தது அவசியமற்ற குழப்பம் என்று கூறினார்.

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவித்தது குழந்தை பிறந்த போது பிறந்தநாளாக கொண்டாடுவது எப்படி? குழந்தைக்கு பெயர் வைத்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுவது போல் உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தவதற்காக இந்த அறிவிப்பாக உள்ளது.வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு இட ஒதுக்கீடு ரத்து என நீதிமன்றம் கூறியது. எங்களை பொறுத்தவரை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தலுக்காக அதிமுக அரசு அறிவித்ததே இந்த ஒதுக்கீடு. சரியாக மொழி வாரியாக கணக்கெடுக்க வேண்டும். ஜாதிவாரியாக எண்ணிக்கைக் கேற்ப இட ஒதுக்கீட்டை சரியாக பிரித்து தர வேண்டும் என்றும் பேசினார்.

மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு சீமான் பேசியபோது,நாடு ஏற்றுக்கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கையில் உள்ள பிழை, எண்ணெய் நிறுவனங்களை அதற்கான விலையை நிர்ணயத்து கொள்ளலாம் என்ற கொள்கை முடிவு எடுத்த பிறகு விலை உயர்வை தடுக்க முடியாது. முதலாளிகளின் லாப தேவைக்காக இயங்குவதால் இந்த சிக்கல் உள்ளது என்றார்.

தமிழகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனை என்பது பேரம் பேசும் செயல். திமுக, அதிமுக இரண்டுமே ஊழல்வாதிகள் தான் என்று அவர்களே கூறிக்கொள்கின்றனர்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுச் சொத்துக்களை தொடர்ந்து தனியார் மயமாக்கி வருவதன் காரணமாக இந்தியா என்பது வருங்காலங்களில் பெயரளவில் மட்டுமே இருக்கும். 100 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட இந்தியா இருக்காது மற்றும் திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், பிஜேபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது என கண்டனத்தை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!