நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலத்தில் தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு அளிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலத்தில்  தே.மு.தி.க.,வினர் விருப்ப மனு அளிப்பு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தேமுதிக.,வினர்.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு வழங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகரில் உள்ள 60 கோட்டங்களுக்கும் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள நகர உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் களத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் ஆலோசனை வழங்கினார். மேலும் விருப்ப மனு வழங்கிய நாள் முதலே அந்தந்த பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் தனித்துப் போட்டி என நமது தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்றுமே கேப்டனின் வலுசேர்க்க கூட்டணியாக இருந்தாலும், தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழுடன் கேப்டனின் பாதத்தில் சமர்ப்பித்து அவர்களை வலு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai as the future