நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுகவுக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் ஆதரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுகவுக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் ஆதரவு
X

 சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அரவிந்தன், தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தெலுங்கு சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையான தனி நல வாரியம் அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!