சேலம் வழியாக செல்லும் ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைப்பு

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைப்பு
X

பைல் படம்.

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சேலம் வழி செல்லும் மூன்று ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு பெட்டி-4, பார்சல் -2 , மாற்றுத்திறனாளி-1 என ஏழு பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்படுகின்றது.

அதேபோல் தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை முதல் இருபார்சல், மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளும், கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 8 முதல் முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு -6 இருப்பார்சல், மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்