சேலத்தில் உடல்நலம் பாதிப்பால் மன உளைச்சல்: சகோதரிகள் இருவர் தற்கொலை

சேலத்தில் உடல்நலம் பாதிப்பால் மன உளைச்சல்: சகோதரிகள் இருவர் தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட இருவர்.

சேலத்தில் உடல்நலம் பாதிப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சகோதரிகள் இருவர் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சகோதரிகள் லட்சுமி (வயது 53) மற்றும் சரஸ்வதி (வயது 50). ஊனமுற்ற சரஸ்வதிக்கு 50 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இதனால் கணவரை இழந்து வாழும் அக்கா லட்சுமியுடன் வசித்து வந்தார். லட்சுமியின் மகளுக்கு திருமணம் ஆகி விட்டதால் சகோதரிகள் இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் லட்சுமிக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு உறக்கம் இன்றி தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சரஸ்வதி, மாற்றுத்திறனாளி என்பதால் உடல் நலம் பாதித்துள்ள சகோதரிக்கு உதவ முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று இரவு தூக்கு மாத்திரை அதிகம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வீராணம் போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மனவுளைச்சல் காரணமாக சகோதரிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story