சேலம் வழியாக கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

சேலம் வழியாக கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் கைது
X

சேலம் வழியாக கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய இருவரை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

சேலம் வழியாக கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய இருவரை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா நோக்கி சென்ற ரயிலில், சேலம் மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ராகுல் மனோஜ் மற்றும் ரெனில் பிஜூ ஆகியோரின் பைகளை சோதனையிட்டதில் 4 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!