நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த திருநங்கைகள்

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த திருநங்கைகள்
X

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த திருநங்கைகள்.

சேலம் மாநகராட்சி தேர்தலில் நீண்ட வரிசையில் காத்திருந்து திருநங்கைகள் வாக்களித்தனர்.

சேலம் மாநகராட்சி தேர்தல் அமைதியான முறையில் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. 18வது கோட்டத்திற்குட்பட்ட தொகுதியில் தேமுதிக சார்பில் திருநங்கை ராதிகா என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து திருநங்கைகள் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 18 ஆவது கோட்டத்திற்குட்பட்ட மெய்யனூர் அரசு பள்ளியில் நடைபெற்று வரும் தேர்தலில் வாக்குப் பதிவு செய்ய அந்த பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஒன்று திரண்டு வந்து வாக்களித்தனர்.

மேலும் திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கி அதனை நிறைவேற்றிய அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். தங்கள் சமுதாயத்தின் சார்பில் போட்டியிடும் திருநங்கையை வெற்றி பெறச் செய்வதே தங்களின் நோக்கம் என்றும் அதற்காக பல்வேறு கட்டங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நிச்சயம் அவர் 18வது கோடத்தில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!